Posts

சொல்லடா பிரகாசா

வாழ்க்கையே உண்மையில் நோக்கமாய் இருக்கையில், வாழ்க்கையில் எதற்கடா நோக்கங்கள் பிரகாசா..?? சொல்லடா ஞானச் சுயம்பிரகாசா ! ஆதியும் அந்தமும் ஆனவன்உனக்குள்ளே.. அர்த்தமில் தேடல்கள் எதற்கடா பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! காலமேயானவன் காலமில்லாதவன்-காலம் குறித்தெலாம் கவலையேன் பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! வாழ்தல் வரமாம் சாதலே சாபமாம் -மாயை இதனினும் வேறெதுப் பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா.. ! விண்ணெலாம் நிறைந்தவன் தானேன உணர்ந்தவர் மண்ணிடம் தோற்பதும் நடக்குமோ பிரகாசா.. ? சொல்லடா ஞானச் சுயம்பிரகாசா ! நாடகம் உலகெலாம் நானில்லை நீயில்லை.. அவன் அவள் மட்டுமே அறிவையோ பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! இருளில்லை ஒளியது.. குளிரில்லை தனலது.. நீயின்றி போகினால் ஏதடா பிரகசா..?சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! மண்ணெலாம் பொன்னடா.. ரெண்டுமே ஒண்ணடா.. பேதங்கள் செய்வதிடும் பேயெது பிரகாசா..?சொல்லடா ஞான சுயம்பிரகாசா !

நூல் அறிமுகம்

 யா பெரெல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம், நியூ சென்சுரி பதிப்பகம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கதைகள் கொண்டாட்டமானவை. காரணம் அதில் உள்ள கற்பனைக்கான இடம். பாட்டி வடைசுட்ட கதையை பத்து குழந்தைகளிடம் சொன்னால் அந்த பத்து பேரின் மனத்திற்குள்ளும் நிகழும் கதைகள் வேறுவேறானவை. அவர்களின் பாட்டிகளும் காக்கைகளும் நரிகளும் கூட வேறுவேறானவையாகவே இருக்கும்.  இந்த சுயகற்பனை என்னும் தனித்துவத்தைத் தான் இன்றைய குழந்தைகள் வகுப்பறைகளில் தொலைக்கின்றன. காரணம் பாடப்புத்தகங்களும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் அறிவியலையோ கணிதத்தையோ சலிப்பூட்டும் தர்க்கங்களாகவே பிள்ளைகளிடம் அளிக்கிறார்கள். ஆர்க்கமிடீஸ் தத்துவமோ, நியூட்டனின் விதிகளோ பிள்ளைகளுக்கு நெட்டுரு போட வேண்டிய இரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே. சற்றும் சுவாரசியமில்லாத இந்த மனப்பாட விளையாட்டு பெரும் சலிப்பூட்டுவையாக மாறுபதில் வியப்பில்லை. இதை நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவும் சுவாரசியங்களாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதில்லை. இந்த காரணங்களால்தான் நெட்டுரு போட்டு தேர்ச்சி பெற்ற கையோடு நம் மாணவர்கள் அறிவியலைக் கை விடுகிறார்கள்.  வாட்ஸப் வழிய

சுவர்களின் சிநேகிதி

வீட்டில் அவளுக்கு விளங்காத வஸ்து சுவர்கள் தான்.. தவழ்ந்து சென்று சுவர்களை ஒரு கையால் தொட்டுப் பார்ப்பாள்.. சுவரில் பூசிய வண்ணத்தின் சுவையைச் சோதனை செய்வாள்.. அதைத் தொட்டுத் தொட்டு மேலேறிச் செல்வதுபோல் எம்பிப் பார்ப்பாள்.. எதுவும் தோன்றாவிடில் தலையைக் கீழே சாய்த்து ஒரு கையால் சுவரைத் தட்டிக் கொண்டிருப்பாள். சுவர்களின் உயரம் அவளுக்கு பிரமிப்பைைத் தந்திருக்கலாம்.. அல்லது அதன் வேறு வேறு வண்ணங்கள் அவளை ஈர்த்திருக்கலாம்.. ஆனாலும் சுவர்கள்  சுவைப்பதில்லை.. பெரிதாய் சத்தம்  எழுப்புவதில்லை.. அசைந்து ஆடி வேடிக்கைக்கூட காட்டாமல் வெறுமனே நிமிர்ந்து நிற்கிறது.. அவள் உலகத்தில் இம்மூன்றும் செய்யாத ஒன்றிற்கு எந்த மதிப்பும் இல்லை.. குழப்பத்துடன் சுவரைத் தடவி கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து லேசாய் புன்னகைக்கிறாள்.. மெதுவாய் எனக்குள் சொல்லிக்  கொள்கிறேன் ' சுவர்களைப் புரிந்துகொள் மகளே.. நீ பெறக்கூடிய உயர்ந்த அறிவு  அது'
Image
கொரோனோ என பரவலாக அறியப்படும் COVID-19. ஜனவரி நடுவில் சீனாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட இந்நோய் இன்று உலகம் முழுக்க பெரும்பீதியைக் கிளப்பி வருகிறது. நாங்கைந்து நாள் தனிமைப்படுத்துதலுடன் கூடிய ஒரு நல்ல சிகிச்சையில் முற்றிலுமாக குணமாக்கக் கூடிய நோய்தான் இது. இந்த நோயின் மரண விகிதாச்சாரமும் இதே குடும்பத்தைச் சேர்ந்த முந்தைய நோய்களான சார்ஸ், மெர்ஸ் போன்றவற்றைவிட ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. என்றாலும் இந்த நோய் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் அச்சுருத்தலாக மாறி இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, காட்டுத்தீ போன்ற இதன் பரவும் வேகம். கடந்த நான்கு வாரங்க்களில் மட்டும் இந்த நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்து இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. இன்றைய தின நிலவரப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க 2,19,355. பலி எண்ணிக்கை 8969. சீனாவில் அதிகபட்சமாக 80,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3245 பேர் மடிந்துள்ளனர். நோயுற்று பின் அதிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 85,745 பேர், இதனுடன் ஒப்பிட இறப்பு விகிதம் 9%. நோய்தொற்று முற

மாரியம்மன் கோயில் தெரு மாயவினாயகர் மகாத்மியமும் 90's கிட்ஸ் வாழ்க்கையும்

Image
ஒரு செப்டம்பரின் மாலை நேரம், அனேகமாக  1996 ஆக இருக்கலாம். சந்தைத் தோப்பு மைதானத்தில் நானும் தெரு நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிக்  கொண்டிருந்தோம். விளையாட்டு தொடங்குவதற்கு முன்பான பேச்சு ராஜவீதிப் பையன்கள் வைக்கும் பிள்ளையார் சிலை குறித்தானதாக இருந்தது. ராஜவீதியின் குடும்பங்கள் ஓரளவு வசதியானது. அவர்களில் பெரும்பாலோர் பெங்களூரில் சொந்தங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பிள்ளையார் சிலை வைக்கும் பழக்கம் பெங்களூர் நகரத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம். அந்த பையன்களும் அவர்கள் வைக்கும் சிறிய பெயிண்ட் சிலைகள் பெங்களூரிலிருந்து வாங்கி வரப்பட்டதாகச் சொல்லுவார்கள். 3 நாட்களோ அல்லது 5 நாட்களோ தினமும் இரவில் பூசை செய்வார்கள். கடைசி நாள் சிலையை நன்கு அலங்கரித்து சைக்கிள் கேரியரில் வைத்து ஏதேதோ புரியாத கன்னட கோசங்களுடன் ஊர்வலம் வருவார்கள். கடைசியாக பிள்ளையார் கோயில் கிணற்றிலோ அல்லது அன்புபிரியாள் கோயில் கிணற்றிலோ சிலையைப் போட்டுவிட்டு பிரசாதம் தருவார்கள்.இந்த மொத்த நிழ்வுகளும் பெரியவர்கள் தலையீடின்றி சிறுவர்களே செய்வார்கள். "அவங்க எல்லா வீட்டிலயும் காசு வசூல் பண்றாங்கடா" என்று மணி சொன்னபோது

மெஹர்

Image
பிரபஞ்சனின் யாசுமின் அக்கா சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதை பாயம்மா. இஸ்லாமிய நெறி தவறாமல் இறையச்சத்துடன் வாழும் குடும்பம் பாயம்மாவினுடையது. ஒரு மகள். அவளுக்கு சில ஆண்டுகள் வயதில் இளைய ஒரு மகன். மகளின் திருமணம் தவிர அல்லாஹ்விடம் வேறு கோரிக்கை ஏதும் மெஹருக்கு (பாயம்மா) இல்லை. ஆனால் நகைக்கடை விற்பனையாளனான அவள் மகனின் சொற்ப வருமானத்தில் யாசுமினின் திருமணத்தை நடத்துவதா, ஒழுகும் வீட்டுக் கூரையை சரி செய்வதா? ஏழ்மை எப்போதும் விருந்தாளியாய் தங்கியுள்ள அந்த வீட்டில் எளிய ஆசைகளும் பெருங்கனவுதான். இறுதியாய் யாசுமினுக்கு ஒரு வரன் அமைகிறது. சேர்த்து வைத்த சிறிது நகைகள் நம்பிக்கை அளித்தாலும் ரொக்கம், நிக்காஹ் செலவு, நிக்காஹ்க்கு முன் கூரை வேய என பணத் தேவை கூடுகிறது. பாயம்மாவின் தன் துயரங்களை மகன் மேல் ஏற்றுகிறாள். அவன் வயதில் சிறியவன். தாயின் சுமைகளைத தான் சுமக்கும் அன்பு நிறைந்தவன். ஆனால் இந்த தொகை அவன் சத்துக்கும் மீறியதாயிற்றே?  மார்க்க வழி வந்த ஒழுக்கம், நேர்மை எல்லாம் அவன் தேவைகளுக்கு முன் மெதுவாய் கரைகிறது. அவன் நேர்மையின் மீது அபார நம்பிக்கை கொண்ட அவன் முதலாளியிடம் திருடுகிறான்.

தேடலின் மூலம்

Image
எங்கோத் தவறு.. எங்கு தவறு?  தெரியவில்லை இடம் தெரியாதத் தவறை தேடும்தோறும் அறியாத தவறுகள் பல அறியக் கிடைக்கின்றன.. அகற்றியபடி மேன்மேலும் தேடுகின்றேன் மூலமான அந்தத் தவறை.. நாளின் இறுதிவரை அது எங்கெனத் தெரிவதே இல்லை.. துயரில்லை தெரியாத அந்த தவறினால்தான் மேலும் மேலும் எம் தவறுகள் களையப்பட்டு யான் மேம்படுகிறேன்... எங்கோத் தவறு ஒன்று எப்போதும் வாழட்டும் ஏனெனில் அதைப் பிடித்துக் கொண்டே நான் ஆண்டவன் பாதம் தொடும் தூரம் வரைகூட சென்றுவிடகூடும்